முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்


முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 16-ந் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தினமும் அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ேதரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் பழைய ஆதனக்கோட்டை, சோத்துப்பாளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையும், ஆதனக்கோட்டை கிராமமக்களும் செய்திருந்தனர்.


Next Story