முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
வடகாட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 16-ந் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. மேலும், பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் அனைவரது வீடுகளிலும் பொங்கல் வைக்கப்பட்டு, ஆடு, கோழிகளை வெட்டி பலியிடப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதைெயாட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மஞ்சள் விளையாட்டு விழா நடக்கிறது.