முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா


முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
x

முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா பூச்சொரிதலுடன் நேற்று இரவு தொடங்கியது. இதையொட்டி வயலோகத்தை சுற்றியுள்ள குடுமியான்மலை, குளவாய்ப்பட்டி, காட்டுப்பட்டி, புதூர், அகரப்பட்டி, தச்சம்பட்டி, முதலிப்பட்டி, விசலூர், மாங்குடி, புல்வயல், மண்ணவேளாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூக்களை எடுத்து கொண்டும், கைகளில் பூக்களை தட்டுகளில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அந்த பூக்களை அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். முன்னதாக பக்தர்கள் பால்குடம், அலகுகுத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து 28-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது. வருகிற 4-ந்தேதி பொங்கல் விழாவும், 5-ந்தேதி தேேராட்டமும், 6-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.


Next Story