நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் வந்த 2,500 டன் கடுகு புண்ணாக்கு!


நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் வந்த 2,500 டன் கடுகு புண்ணாக்கு!
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 11:55 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லுக்கு 2,500 டன் கடுகு புண்ணாக்கு சரக்கு ரெயிலில் வந்தது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவன மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வாங்கி வரப்படுகிறது. அந்த வகையில் நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2,500 டன் கடுகு புண்ணாக்கு நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டன. நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த மூட்டைகள் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி கோழி தீவன ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.


Next Story