வேலூர் கோர்ட்டில் முருகன் ஆஜர்
வேலூர் கோர்ட்டில் முருகன் ஆஜரானார். தொடர்ந்து வழக்கு 26-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முருகன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். முருகன் ஜெயிலில் இருந்த போது, அங்கு சோதனைக்கு வந்த பெண் போலீசாரிடம் அவதூறாக நடந்ததாக பாகாயம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 4-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் வந்தது. இதற்காக திருச்சியில் இருந்து பலத்த போலீஸ் காவலுடன் முருகன் வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு, ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணைக்கு பின்னர் வழக்கை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு ரோஸ்கலா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பலத்த காவலுடன் மீண்டும் 8.30 மணி அளவில் திருச்சிக்கு போலீசார் முருகனை அழைத்து சென்றனர். முன்னதாக கோர்ட்டு வளாகத்தில் விசாரணைக்காக காத்திருந்த முருகனை அவரது மனைவி நளினி சந்தித்து பேசினார்.