முனியப்பன் கோவிலில் திருவிழாவையொட்டி எருதாட்டம்
முனியப்பன் கோவிலில் திருவிழாவையொட்டி எருதாட்டம் நடந்தது.
கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டி அருகே பெரிய புத்தூரில் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாவையொட்டி எருதாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி பல்வேறு இடங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து வெண்ணங்கொடி முனியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து எருதுகளுக்கு சுகாதாரத்துறையின் சார்பில் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை ெசய்தனர். பின்னர் சேலம் ஆர்.டி.ஓ. விஷ்ணு வர்த்தினி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் மதியம் 2.30 மணிக்கு எருதாட்டம் தொடங்கி மாலை 4.30 மணி வரை நடந்தது. சில மாடுபிடி வீரர்கள் விதிமுறைகளை பின்பற்றாததால் மேற்கொண்டு எருதாட்டம் நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் எருதாட்டை காண வந்த சேலம் பெரியபுத்தூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் பிரேம்குமார் (வயது 15) என்ற சிறுவனை மாடு முட்டியது. இதில் காயம் அடைந்த சிறுவனுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.