புகையில்லா போகி பண்டிகை கொண்டாட நகராட்சி தலைவர் வேண்டுகோள்


புகையில்லா போகி பண்டிகை கொண்டாட நகராட்சி தலைவர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் பகுதியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை சுத்தம் செய்யும்போது அதன் கழிவுகளை தீயிட்டு எரிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களும், வர்த்தக பிரமுகர்களும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து போகி பண்டிகை அன்று அப்புறப்படுத்த உத்தேசித்துள்ள கழிவுப்பொருட்களை நகராட்சி வாகனங்களில், நகராட்சி குறிப்பிட்டுள்ள கழிவு சேகரிப்பு இடங்களில் ஒப்படைக்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.


Next Story