செங்கோட்டை நகராட்சி கூட்டம்
செங்கோட்டை நகராட்சி கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, மேலாளா் ரத்தினம், பொறியாளா் சுரேஷ், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், கணக்கா் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், செங்கோட்டை நகராட்சி பகுதியில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து நகர பகுதிகளில் தேவையான இடங்களில் புதிய மின்கம்பம் வைத்து தெருவிளக்கு அமைக்க வேண்டும். குடிநீர், கழிவுநீர் ஓடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கவுன்சிலர்கள் பேசினார்கள். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரஹீம், சுப்பிரமணியன், முருகையா, பொன்னுலிங்கம், முத்துப்பாண்டி, வேம்புராஜ், ராம்குமார், இசக்கித்துரை பாண்டியன், சுடர்ஒளி, சந்திரா, பினாஷா, இச்சியம்மாள், பேபிரெசவுபாத்திமா உள்பட பலா் கலந்து கொண்டனா்.