வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x

மகிழங்கோட்டை, ராஜாமடம் பிரிவு 2 சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

மகிழங்கோட்டை, ராஜாமடம் பிரிவு 2 சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிக்கடி விபத்து

அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை போக்குவரத்திற்கு முக்கியமானது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாளியக்காடு வளைவு பகுதியில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

உயர்கோபுர மின்விளக்கு

சாலை விரிவாக்கம் செய்யப்பட்டாலும் 2 ரோடு சந்திப்பு பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கவில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அதிராம்பட்டினம் மகிழங்கோட்டை, பட்டுக்கோட்டை பிரிவு 2 சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் 2 ரோடு சந்திப்பு உள்ளது. இங்கு உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் அந்தபகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இ்ந்த சாலை வழியாக அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மகிழங்கோட்டை, ராஜாமடம் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்களில் சாலையை கடக்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பட்டுக்கோட்டை பிரிவு பகுதியில் 2 ரோடு சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story