மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் தெற்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதுகுறித்து மாரியப்பன் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் விசாரணை நடத்தினார். அதில் வைராவிகுளம் பொத்தையை சேர்ந்த மாடசாமி என்ற மகேஷ் (37) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாடசாமியை போலீசார் கைது செய்தனர்.


Next Story