மோட்டார் சைக்கிள்- பணம் திருட்டு
கரிவலம்வந்தநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்- பணம் திருடு போனது.
தென்காசி
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சூடாமணி மனைவி கெங்கம்மாள் (வயது 55). இவருடைய மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். கெங்கம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் கதவை திறந்து பீரோவை உடைத்து ரூ.5,900-ஐ மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி (52). இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ அவரது மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக இருவரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story