மோட்டார் சைக்கிள்- சரக்கு வேன் மோதல்; வடமாநில தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்- சரக்கு வேன் மோதல்; வடமாநில தொழிலாளி பலி
x

பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதியதில் வட மாநில தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ. நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஸ்ரீராம் மகன் மகேந்திரன் (வயது 34). சோன்பால் மகன் ஹரிபாபு (40). இவர்கள் இருவரும் பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டைல்ஸ் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 2 பேரும் ஜெ.ஜெ.நகரிலிருந்து வேலைக்கு மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதிக்கு சென்று கொண்டிருந்தனர். பொன்னமராவதி போக்குவரத்து பணிமனை எதிரே வந்த போது பொன்னமராவதியிலிருந்து நெற்குப்பையை நோக்கி சென்ற சரக்கு வேனும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக ேமாதியது.

வட மாநில தொழிலாளி பலி

இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹரிபாபு மற்றும் சரக்கு வேன் டிைரவர் குளத்தூர் தாலுகா நல்லூரை சேர்ந்த கருப்பையா மகன் நாகராஜ் (37) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த பொன்னமராவதி போலீசார் மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடுப்பு அமைக்க கோரிக்கை

விபத்து நடந்த சாலை பொன்னமராவதியில் முக்கிய சாலை என்பதால் அந்த பகுதியில் தடுப்பு அமைக்க வேண்டும் எனவும், ரவுண்டானா அமைத்து வாகனங்களில் வேகத்தை குறைத்து விபத்தை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story