கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மோட்டார் சைக்கிள் பிரசார பேரணி
கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மோட்டார் சைக்கிள் பிரசார பேரணி நடைபெற்றது.
தியாகதுருகம்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட குழு சார்பில் அதிகரித்து வரும் போதை கலாசாரத்திற்கு எதிராக 'வேண்டாம் போதை, வேண்டும் வேலை' என்ற கருத்தை வலியுறுத்தியும், மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நலன்களை காக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் பிரசார பேரணி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இந்த பேரணியை முன்னாள் சுகாதார இணை இயக்குனர் உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் தொடங்கிய இந்த பேரணி மூரார்பாளையம், பகண்டை கூட்டுரோடு, திருக்கோவிலூர், எறையூர் வழியாக சென்று உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து இங்கு பிரசார கூட்டம் நடைபெற்றது. முன்னதாக போதைக்கு எதிரான பிரசார கையெழுத்து இயக்கத்தை கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்புராயலு கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவர் ஆனந்தன், மாநில இணைச்செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் ராஜா, வேலாயுதம், சிவகுமார், பழனி, சின்னராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.