மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x

மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தார்.

திருவாரூர்

மன்னார்குடி;

மன்னார்குடி நெடுவாக்கோட்டை கீழத் தெருவை சேர்ந்தவர் சிவபுண்ணியம் (வயது 77). வெள்ளரிக்காய் வியாபாரியான இவர் நேற்று மதியம் வியாபாரம் முடிந்த பின் எதிரே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு ரோட்டை கடந்தார். அப்போது 17 வயது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவபுண்ணியம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிவபுண்ணியம் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வருகிறார்கள்.


Next Story