3 குழந்தைகளின் தாய் எலி மருந்து தின்று தற்கொலை


3 குழந்தைகளின் தாய் எலி மருந்து தின்று தற்கொலை
x

3 குழந்தைகளின் தாய் எலி மருந்து தின்று தற்கொலை கொண்டார்.

புதுக்கோட்டை

விராலிமலை ஒன்றியம், மண்டையூர் ஆசாரி தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி பவித்ரா (வயது 27). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பவித்ராவிற்கு மூலநோய் இருந்ததாகவும், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் சரி ஆகாததால் விரக்தி அடைந்த பவித்ரா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story