கூடலூரில் மனைவி நல வேட்பு விழா- 50-க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்பு
கூடலூரில் மனைவி நல வேட்பு விழா -50-க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்பு
நீலகிரி
கூடலூர்
கூடலூர் மனவளக்கலை மன்றம் சார்பில் கூடலூர் நாடார் அரங்கில் நேற்று மனைவி நல வேட்பு விழா தலைவர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பாக்கியநாதன் வரவேற்புரையாற்றினார். தேவாலா துைண போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார். பேராசிரியர் பாஸ்கர், மனைவி நல வேட்பு விழாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் மலர், கனி பரிமாறிகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பொருளாளர் சண்முகவேல் நன்றி கூறினார். பேராசிரியர் சுமிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story