மொரப்பூர், பொம்மிடியில் கூடுதல்ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்


மொரப்பூர், பொம்மிடியில் கூடுதல்ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்
x
தர்மபுரி

மொரப்பூர்

செந்தில்குமார் எம்.பி.யிடம், ரெயில் பயணிகள் சங்கத்தினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மங்களுர்- சென்னை சென்ட்ரல், திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் ஆகிய ரெயில்கள் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையிலான ரெயிலை சேலம் வரை நீட்டித்து, அந்த ெரயில் திருப்பத்தூர், சாமல்பட்டி, மொரப்பூர், பொம்மிடி ெரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பொம்மிடி ெரயில் நிலையத்தில் கோவை விரைவு ரெயில், திருவனந்தபுரம் விரைவு ரெயில் பெங்களூரு விரைவு ரெயில் ஆகிய ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட எம்.பி., மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்னவ் மற்றும் ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது ரெயில் பயணிகள் சங்க பொதுச் செயலாளர் ரகுநாதன், ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியன், பொம்மிடி ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் காமராஜ், பொம்மிடி மக்கள் சங்க தலைவர் முணிரத்தினம், செயலாளர் ஜெபசிங் ஆகியோரும் பொம்மிடி, மொரப்பூர் ரெயில் நிலையங்களில் ெரயில்கள் நின்று செல்லக்கோரி மனு செந்தில்குமார் எம்.பி.யிடம் மனு அளித்தனர்.


Next Story