டெலிகிராம் மூலம்வாலிபரிடம் ரூ.5.71 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசில் புகார்


டெலிகிராம் மூலம்வாலிபரிடம் ரூ.5.71 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசில் புகார்
x

டெலிகிராம் மூலம் சேலம் வாலிபரிடம் ரூ.5.71 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சேலம்

சேலம்

சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க நபருக்கு கடந்த 18-ந் தேதி டெலிகிராம் மூலம் அடையாளம் தெரியாத ஒருவர் அறிமுகம் ஆனார். பின்னர் அவர் ஒரு லிங்கை அனுப்பி அதில் பணம் செலுத்தி டாஸ்க் முடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பி அவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 71 ஆயிரத்து 280 பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக அவர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, அவரது பணம் பஞ்சாப், கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story