ஆன்லைன் மூலம்மேட்டூர் பெண்ணிடம் ரூ.2.20 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை


ஆன்லைன் மூலம்மேட்டூர் பெண்ணிடம் ரூ.2.20 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
x

ஆன்லைன் மூலம் மேட்டூர் பெண்ணிடம் ரூ.2.20 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பி.என்.பட்டியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவரின் நண்பர் பகுதி நேர வேலை மற்றும் பண முதலீடு பற்றி ஒரு இணையதளத்தை பரிந்துரை செய்தார். அதை நம்பிய அந்த பெண், ஆன்லைன் மூலம் அந்த நிறுவனத்தில் முதலில் ரூ.1,000 முதலீடு செய்தார். இதற்காக அவருக்கு கமிஷன் தொகையாக ரூ.1,843-ஐ கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக 32 பரிவர்த்தனைகளில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 769-ஐ முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார். இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இந்த மோசடி குறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story