சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நிகழும் அதிசயம்


சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நிகழும் அதிசயம்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்தது

சிவகங்கை

இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வேதாந்த மடத்தின் மடாதிபதிகள் சொரூபானந்த மகரிஷிகள், மாதவானந்தா சுவாமிகளும் உருவாக்கிய சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடந்தது. அரியாண்டிபுரம் மாதவஜோதி லிங்கேஸ்வரர்-கூம்பாச்சி தேவி கோவில் அமைந்துள்ள வேதாந்த மடத்தில் வருடத்திற்கு இருமுறை லிங்கத்தின் மீது சூரிய ஒளி பிரகாசமாக விழக்கூடிய அபூர்வமான நிகழ்வு நடந்தது.

அதன்படி பங்குனி மாதம் 20-ந் தேதியில் இருந்து 23-ந்தேதி வரையும் (ஏப்ரல் 3 முதல் 5 வரை) சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும். இதே போல ஆவணி மாதம் 15-ந்தேதியில் (செப்டம்பர் 1 முதல் 5-ந் தேதி வரை) இருந்து சூரிய கதிர்கள் ஒரு வாரத்திற்கு சிவலிங்கத்தின் மீது பிரகாசமாய் விழும் அரிய நிகழ்வு நடைபெறும். சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வினை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். மடாதிபதி மாதவானந்தா குமாரசாமிகள் இந்நிகழ்வினை விளக்கி கூறினார்.


Next Story