கருணாநிதி உருவப்படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை


கருணாநிதி உருவப்படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
x
தினத்தந்தி 4 Jun 2023 12:30 AM IST (Updated: 4 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கருணாநிதி உருவப்படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டயபுரம் சாலையில் உள்ள அலுவலகம் முன்பு அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கருணாநிதியின் உருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட செயலரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் மாவட்ட கழக அலுவலகம் முன்பு உள்ள கட்சி கொடியை அமைச்சர் கீதாஜீவன் ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலர்கள் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



Next Story