கழிவுநீர் வாறுகால் அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடியில் கழிவுநீர் வாறுகால் அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் வாறுகால் அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
கழிவுநீர் வாறுகால் பணிகள்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் மாநகராட்சிக்குட்பட்ட கோமதிபாய் காலனியில் கழிவுநீர் வாறுகால்களை வரும் மழைக்காலத்திற்கு முன்பாக அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை வரும் மழைக்காலத்திற்கு முன்பாக துரிதமாக முடித்திடவேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, உதவி பொறியாளர் சரவணன், கவுன்சிலர் தெய்வேந்திரன் உள்பட கலந்து கொண்டனர்.
ஏ.டி.எம். சேவை
அதனை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் நடமாடும் ஏ.டி.எம் எந்திர சேவையினை கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் தொடங்கி வைத்தார்.
இதில் கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.