எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
சீர்காழி, மணல்மேடு, செம்பனார்கோவிலில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி, மணல்மேடு, செம்பனார்கோவிலில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நினைவு தினம் அனுசரிப்பு
சீர்காழி ஈசானிய தெருவில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இதை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் பாரதி தலைமை தாங்கினார். நகர செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நற்குணன், ரவிச்சந்திரன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்தி, சந்திரமோகன், மாவட்ட துணை செயலாளர் செல்லையன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், பேரூர் கழக செயலாளர் போகர் ரவி, முன்னாள் நகர கழக செயலாளர்கள் பக்கிரிசாமி, மணி, முன்னாள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி செல்லமுத்து குமரன்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணல்மேடு
இதே போல் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சி நகரசெயலாளர் வினோத் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மணல்மேடு பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் தொல்காப்பியன் முன்னிலை வகித்தார்.
இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மதன், செல்வி, லதாகல்யாணம், ரஞ்சிதா ரமேஷ், ஒன்றிய பொருளாளர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ஊர்வலம்
முன்னதாக கிழாய் சாலையில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் பஸ் நிலையத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
செம்பனார்கோவில்
செம்பனார்கோவில் அருகே காலகஸ்திநாதபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு மற்றும் அ.தி.மு.க. அலுவலம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பாரதி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் ஜெனார்த்தனம். கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கபடி. பாண்டியன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் மகேந்திரன் உள்பட சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.