எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு


எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:30 AM IST (Updated: 26 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் கடைவீதியில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, சக்தி, கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், ஒன்றிய துணை செயலாளர் பாலதண்டாயுதம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சொக்கலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story