எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
தலைஞாயிறு, திருமருகலில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தலைஞாயிறு, திருமருகலில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தலைஞாயிறு
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவருடைய உருவப் படத்திற்கு தலைஞாயிறு ஜெயலலிதா பேரவை சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைஞாயிறு ஜெயலலிதா பேரவை பேரூர் செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான கதிரவன் தலைமை தாங்கினார்.
இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அருணா மாரிமுத்து, ரேவதி சோமசுந்தரம், முன்னாள் கவுன்சிலர் அறிவழகன், பேரவையை சேர்ந்த பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமருகல்
திருமருகல் மெயின் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் அமைப்பு செயலாளர் ஆசைமணி தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட பிரதிநிதி பெரியமணி, ஒன்றிய துணை செயலாளர் திருமேனி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திட்டச்சேரியில் நகர செயலாளர் அப்துல் பாசித் தலைமையில் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நகர துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் நடராஜன், மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.