எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா


தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 10:42 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினம்

வாய்மேடு, ஜன.18-

நாகை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் ஒன்றிய செயலாளர் கிரிதரன், பொருளாளர் அன்பழகன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், நகரச் செயலாளர் நமசிவாயம், நகர துணை செயலாளர் சுரேஷ்பாபு உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.இதேபோல் ஒன்றிய, நகர கட்சி அலுவலகங்களிலும், ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளிலும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

வாய்மேடு

வாய்மேட்டில் அ.தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா மற்றும் கட்சி கொடியேற்றும் விழா நடந்தது. விழாவுக்கு வாய்மேடு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ரமேஷ். கிளைச் செயலாளர் அமுதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பிரதிநிதி மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். ஒன்றிய மாணவரணி தலைவர் பசுபதிபாலமுருகன் முன்னிலை வகித்தார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணைச்செயலாளர் பாலாஜி, கிளைச் செயலாளர் சிவகார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப அணி ஊராட்சி செயலாளர் வினோத், ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், கிளைச் செயலாளர் ரமேஷ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தலைஞாயிறு

தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா மற்றும் கட்சி கொடியேற்றும் விழா நடந்தது. விழாவுக்கு நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கதிரவன் தலைமை தாங்கினார்.

முன்னதாக கடைத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர். இதில் வார்டு கவுன்சிலர்கள் ரேவதி சோமசுந்தர், அருணா மாரிமுத்து, கட்சி நிர்வாகிகள் பாஸ்கர், சந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆயக்காரன்புலம்

நாகை மாவட்டம் ஆயக்காரன்புலத்தில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) சார்பில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா மாநில அமைப்புச்செயலா ளர் பி.வி.கே பிரபு தலைமையில் நடந்தது. இதையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மோகன் குமார், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வேதாரண்யம் நகரச் செயலாளர் முரளி, ஒன்றிய துணைச் செயலாளர் பாக்யராஜ், ஊராட்சி மன்ற தலைவர் நெல்சன் யாசர் பிரபு, நிர்வாகிகள் சிவகுரு நீலமேகம், செந்தில், ராஜா, பெரம்புரவி, வாய்மேடு பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக ஆயக்காரன்புலம் கடை தெருவில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திட்டச்சேரி

திருமருகல் ஒன்றியம் ஆண்டிப்பந்தலில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா மற்றும் கட்சி கொடியேற்றும் விழா நடந்தது. விழாவுக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி, நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் கட்சியின் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். முன்னதாக இளைஞரணி மாவட்ட தலைவர் ராம்சந்தர் வரவேற்றார்.இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி நிர்வாகி கலையரசன் செய்திருந்தார். முடிவில் மாவட்ட பேரவை துணை செயலாளர் ரகுபதி நன்றி கூறினார்.

நாகை

நாகை மாவட்ட அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.அணி) சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நாகை புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும், நகர செயலாளர் நாகராஜன் முன்னிலையிலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில் நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் வடவூர் அமல்ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்சாரி, கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் அர்ஜுனன், உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


Next Story