கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு


கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு
x

தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி நினைவு நாள்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு நாள் நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் தி.மு.க. சார்பில் அனுசரிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு நாளையொட்டி மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய விதிகள் வழியாக 4 ரோடு சென்றடைந்தது. அங்கு அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நாட்டான் மாது, முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தங்கமணி, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து தர்மபுரி 4 ரோடு, கட்சி அலுவலகம், உழவர் சந்தை, டவுன் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று தர்மபுரி நகரில் 33 வார்டுகளிலும் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் நகர பொறுப்பாளர் அன்பழகன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், மாநில சுற்றுச்சூழல் துணைச்செயலாளர் செந்தில்குமார், நகர அவைத்தலைவர் அழகு, நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவல்லி, நகர பொருளாளர் சம்மந்தம், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், சுருளிராஜன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கம்பைநல்லூர்

கம்பைநல்லூரில் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் என்.கிருஷ்ணன், மாசிலாமணி, எஸ்.கிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் துரை பெரியசாமி, நிர்வாகி நடராஜன் ஆகியார் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கம்பைநல்லூர் பஸ் நிலையத்தில் கருணாநிதியின் உருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக கட்சியினர் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இதில் நிர்வாகி ஆதிமூலம், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் ரத்தினவேல், மாதேஸ்வரன், நடேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா, நந்தினி, ஜீவா சேகர், சாந்தி, குமார், விஜயலட்சுமி, நிர்வாகி சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பென்னாகரம்

பென்னாகரத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மேற்கு மாவட்டபொறுப்பாளர் இன்பசேகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து பழைய பஸ் நிலையம் அருகில் வைத்திருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ஏரியூர் செல்வராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் காளியப்பன், துரைசாமி பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா, பாப்பாரப்பட்டி பேரூர் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story