பா.ஜனதா கூட்டம்
சிவகிரியில் பா.ஜனதா கூட்டம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரி காந்தி ரோட்டில் அமைந்துள்ள சண்முக விலாஸ் திருமண மண்டபத்தில் பா.ஜனதா கட்சியின் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய (மண்டல்) செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சோழராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலை வகித்தார். வாசுதேவநல்லூர் ஒன்றிய பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன், மாவட்ட பார்வையாளர் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவரும், தொழிலதிபருமான பொன்.ரமேஷ் தலைமையில் மாற்று கட்சிகளை சேர்ந்த 40 பேர் தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்.
கூட்டத்தில், அடுத்த மாதம் 12, 13-ந் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, சிவகிரியில் பழைய ஆஸ்பத்திரி இருந்த இடத்தில் பெண்களுக்கான மகப்பேறு மருத்துவ நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.