சமத்துவ மக்கள் கட்சி கூட்டம்


சமத்துவ மக்கள் கட்சி கூட்டம்
x

வள்ளியூரில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டம் நடந்தது

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சாமுவேல், மாவட்ட தொண்டரணி செயலாளர் ராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளியூர் நகர செயலாளர் தங்ககுமார் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளரும், தலைமை ஒருங்கிணைப்பாளருமான சுந்தர், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செங்குளம் கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில், வருகிற 3-ந் தேதி நெல்லை மாநகரில் நடைபெறும் மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். வள்ளியூரில் பஸ் நிலையம் கட்டுமான பணி நடந்து வருவதால் பஸ்கள் மெயின் ரோட்டில் நின்று செல்கின்றன. பயணிகளுக்கு போதுமான நிழற்குடை அமைத்து தரவும் மற்றும் பேருந்துகள் செல்லும் வழிதடத்திற்கான வழிகாட்டி பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வள்ளியூர் பழைய பஸ் நிலையம் முதல் ெரயில்வே பாலம் வரை நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ஏசுமணி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் அருள்ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் எட்வின் ஆபிரகாம், ரோசாரி, ராஜேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசரவணன், நகர செயலாளர்கள் நாங்குநேரி குமார், பணகுடி மைக்கேல் அந்தோணி, ஏர்வாடி‌ நகர மகளிர் அணி செயலாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சார்லஸ் நன்றி கூறினார்.


Next Story