மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம்
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
அரிமளத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனத்தில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடைபெற்றது. நேற்று முன்தினம் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேேராட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர்-வள்ளி-தெய்வானை, சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், சண்டீகேஷ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்கள். இதனை தொடர்ந்து 5 தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேைர முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நகரத்தார்கள் மற்றும் அரிமளம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.