இமாச்சலப் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விபத்தில் பலி


இமாச்சலப் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விபத்தில் பலி
x

இமாச்சலப் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விபத்தில் பலி

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஆல்வின் நாயகம். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் வில்லியம்ஸ். இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்த போது அங்கு போர் ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார். தொடர்ந்து இந்தியாவில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்தநிலையில் இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் டெல்லியில் இருந்து இமாச்சலப் பிரதேசம் சென்றார். அங்கிருந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றனர். ஒரு மோட்டார் சைக்கிளில் வில்லியம்சும், அவரது நண்பரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த பஸ்சுக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் ஒதுங்கி நின்ற போது பனிமூட்டத்தின் காரணமாக மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் வில்லியம்ஸ் மற்றும் அவருடன் சென்ற நண்பர் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து வில்லியம்ஸ் உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு வரப்பட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. மேலும் மகன் இறந்த தகவல் அறிந்ததும் அவரது தந்தை ஆல்வின் நாயகம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்தார்.


Next Story