மருத்துவ முகாம்
மருத்துவ முகாம் நடைபெற்றது.
கரூர்
தவுட்டுப்பாளையம் பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், சுகாதார செவிலியர், சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் தவுட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
Related Tags :
Next Story