கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
தஞ்சாவூர்
அம்மாப்பேட்டை ஒன்றியம் வடக்குமாங்குடி ஊராட்சி பெருங்கரை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை ஆய்வாளர் பால்ராஜ், உதவியாளர் கற்பகம் ஆகியோர் 80-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். இந்த முகாமில் வடக்குமாங்குடி, பெருங்கரை அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வடக்குமாங்குடி ஊராட்சிமன்றம் மற்றும் கால்நடைத்துறையினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story