மாற்றுத்திறனாளி குழந்தைகள் மருத்துவ மதிப்பீட்டு முகாம்


மாற்றுத்திறனாளி குழந்தைகள் மருத்துவ மதிப்பீட்டு முகாம்
x

பேராவூரணியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

பேராவூரணி:

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி உறுப்பினர் ஹபீபா பாரூக், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாஸ்கர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், வட்டார கல்வி அலுவலர் கலாராணி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராமநாதன், ஆசிரியர் பயிற்றுனர்கள் சரவணன், முனிராஜ், சிவமுருகன், சிறப்பாசிரியர்கள் சத்யா, மகாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில், பல்வேறு துறை சிறப்பு டாக்டர்கள் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்தனர். இதில் 25 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்காக 30 பேருக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் உதவி உபகரணம் வழங்க 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பயனாளிகளுக்கு காதொலிக் கருவி, நடை பயிற்சி கருவி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. முகாமில் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Next Story