விபத்தில் மெக்கானிக் பலி


விபத்தில் மெக்கானிக் பலி
x

விபத்தில் மெக்கானிக் பலியானாா்

ஈரோடு

ஊஞ்சலூர் அருகே உள்ள கொம்பனைப்புதூரை சேர்ந்தவர் குமார் (வயது 43). இருசக்கர வாகன மெக்கானிக். நேற்று முன்தினம் இவர் தன்னுடைய கடையில் இருந்து ஆராம்பாளையத்துக்கு ெமாபட்டில் சென்று கொண்டிருந்தார். கொம்பனைப்புதூரில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் அவருடைய மொபட் மோதியது. இந்த விபத்தில் குமார் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story