கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
x

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வேலூர்

பொன்னையை அடுத்த எருக்கம்பட்டு ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கோமாரி நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கும் மற்றும் நோய் தாக்கம் ஏற்படாமல் தடுப்பதற்கும் தடுப்பூசிகள் போடப்பட்டது. கால்நடை மருத்துவர் ஜீவன்யா கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தினார். 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. கன்றுக்குட்டிகளை நல்ல முறையில் பராமரித்து வந்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

கால்நடை ஆய்வாளர் உஷா, கால்நடை உதவி அலுவலர் அர்ஜுன் குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story