நெல்லை மாநகராட்சி 12-வது வார்டில் மேயர் சரவணன் ஆய்வு
நெல்லை மாநகராட்சி 12-வது வார்டில் மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதிக்குட்பட்ட 12-வது வார்டு செல்விநகர் பகுதியில் மேயர் பி.எம். சரவணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செல்விநகர் பூங்காவில் மரக்கன்றுகள் நட்டார். அதைத்தொடர்ந்து அங்கு செயல்படும் நுண்உரம் செயலாக்க மையத்தை பார்வையிட்டார். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரமாக செல்லும் கழிவுநீர் ஓடை வாறுகாலில் உள்ள கழிவுநீரை பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மேலும் அங்குள்ள நவீன எரிவாயு தகன மேடையை பார்வையிட்டார். அந்த பகுதியில் உள்ள ஆற்றங்கரை படித்துறையை செப்பனிட்டு, அங்கு தெருவிளக்கு அமைத்திடவும் அறிவுறுத்தினார். செல்வ பாலாஜி நகரில் கட்டப்பட்டு வரும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு அந்த பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து உடையார்பட்டி குளத்தை பார்வையிட்டு கரைப்பகுதியில் உள்ள முட்செடிகளை அகற்றி சீரமைத்து தெருவிளக்கு அமைக்கவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் லெனின், உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் பெருமாள், கவுன்சிலர் கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.