கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்


கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் இருந்து கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானாா்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்:

சின்னசேலம் கூகையூர் ரோட்டில் வசித்து வருபவர் சரவணன். இவரது மகள் சுவேதா(வயது 19). இவர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 10 நாட்கள் கல்லூரி விடுமுறை என்பதால் சுவேதா, வீட்டிற்கு வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 24-ந் தேதி காலை சுவேதா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கும், செல்லவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.


Next Story