பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக விழா


பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக விழா
x

பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக விழா தொடங்கியது.

அரியலூர்

மீன்சுருட்டி:

மாசி மக விழா

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரமோத்சவ விழா விநாயகர் வழிபாட்டுடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி கணக்க விநாயகருக்கு அபிஷேகம், வாஸ்து சாந்தி, ஹோமம், அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெற்றன. இன்று(சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற மார்ச் 2-ந் தேதி வரை தொடர்ந்து யாக பூஜைகள், மதியம் அபிஷேகம் நடைபெற உள்ளன. 4-ந்தேதி வரை மாலையில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளன.

தேரோட்டம்

5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், மாலையில் தேரில் இருந்து சுவாமி கோவிலுக்குள் எழுந்தருளுதல் போன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந்தேதி மாசி மகத்தன்று மதியம் 12 மணியளவில் சூர்னோத்சவம், தீர்த்தவாரி, யாகசாலை கலசங்கள் அபிஷேகம், மாலையில் சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்று, பின்னர் கொடி இறக்கப்படுகிறது. 7-ந் தேதி அம்பாள் உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம், பிராய சித்தா அபிஷேகம், யதார்த்தனா பிரவேசம் ஆகியவை நடைபெறுகின்றன.


Next Story