மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெருமுனை பிரசார கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
அரியலூர்
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு வெங்கடாசலம், மாவட்டக்குழு செந்தில்வேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அணைக்குடம் அணைக்கரை பிரிவு சாலையில், விழுப்புரம் பழங்குடியினர் பட்டியலின மாநாடு குறித்து தீர்மான விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. அப்போது பழங்குடியின மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story