மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி


மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வட்டாரத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளிகளில் தமிழ்நாடு அரசின் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

அந்தந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள் மேற்பார்வையில் தற்காப்பு கலை பயிற்சியாளா்கள் ராம்ராஜ், இப்ராஹிம், காக்கும்பெருமாள், சர்மா, ராணி சந்திரா ஆகியோர் கராத்தே, டேக் வாண்டோ பயிற்சிகளை மாணவிகளுக்கு அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, வட்டார பெண் கல்வி ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஆகியோர் செய்திருந்தனா்.


Next Story