7-ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
சோளிங்கர் அருகே 7-ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
ராணிப்பேட்டை
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வன்னிய மோட்டூரில் 7-ம் வகுப்பு மாணவிக்கு இன்று காலை திருமணம் நடைபெற உள்ளதாக சோளிங்கர் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சைல்டு லைன் அலுவலர், வருவாய் ஆய்வாளர், கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் பூபதி ஆகியோர் மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பெண்ணின் பெற்றோரிடம் குழந்தை திருமணம் குறித்து எடுத்துக்கூறி, திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து 18 வயது பூர்த்தியான பிறகு திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் எழுதிக்கொடுத்தனர்.
மேலும் பெற்றோரிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
Related Tags :
Next Story