மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
செங்கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை மேலூர் கதிரவன் காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கோபூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், யாத்ராதானம், கடம் புறப்பாடு, கோபுரம் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினா், இந்துகாட்டுநாயக்கன் சமுதாய நிர்வாகிகள், பக்தா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.
Related Tags :
Next Story