சோனை அழகாயி அம்மன் கோவில் மண்டலாபிஷேக விழா
எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் உள்ள சோனை அழகாயி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் உள்ள சோனை அழகாயி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்டலாபிேஷக விழா
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் சைவ வெள்ளாளர் பிள்ளைமார் குடும்பங்களுக்கு பாத்தியப்பட்ட சோனை அழகாயி அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த மாதம் 3-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 48-வது மண்டலாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
அதிகாலை கணபதி பூஜையுடன் விழா ஆரம்பமாகி, கோவில் முன்பாக யாக வேள்விகள் காலை முதலே வளர்க்கப்பட்டது. தொடர்ந்து புனித நீர் சோனை அழகாயி அம்மன் மீது ஊற்றப்பட்டது.
அன்னதானம்
பின்னர் சோனை அழகாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதான ஏற்பாடுகளை ராஜேந்திரன் குடும்பத்தினர் செய்திருந்தனர். பெண்கள் மாவிளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர்.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சோனை அழகாயி கோவில் பங்காளிகள் செய்திருந்தனர். முடிவில் மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் கிழங்கு, வளையல்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.