தகர செட்டில் பட்டாசு தயாரிப்பு?
தகரசெட்டில் பட்டாசு தயாரித்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் நெடுங்குளம்-பிச்சுப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பவழ மல்லிபட்டி என்ற பகுதியில் தகரசெட் அமைத்து அதில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் திரி வைக்கப்பட்ட குழாய்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகாசி தாலுகாவில் பல இடங்களில் தகர செட் அமைத்து விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பது அதிகரித்துள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற விதிமீறல்கள் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பை தரும் என்பதால் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story