மக்காச்சோள அறுவடை பணி தீவிரம்


மக்காச்சோள அறுவடை பணி தீவிரம்
x

பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மக்காச்சோள அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்

பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இந்த ஆண்டும் கடந்த நவம்பர் மாதம் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர். தற்போது நன்கு விளைச்சல் அடைந்து அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை பணியில் ஈடுபடும் பெண் பணியாளர்களுக்கு தினக்ககூலியாக ரூ.350 முதல் ரூ.400 வரை வழங்கப்படுகிறது.

அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோள கதிர்கள் களத்தில் கொண்டு போய் சேர்க்கப்படுகின்றன. பின்னர் அங்கு கதிர்கள் மட்டும் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. அதன்பிறகு அரவை எந்திரங்கள் மூலம் கதிர்கள் அடிக்கப்பட்டு, மூட்டைகளில் மணிகள் தனியாக எடுக்கப்படுகிறது. 100 கிலோ கொண்ட மக்காச்சோள மூட்டை ரூ.2 ஆயிரத்து 250 முதல் ரூ.2 ஆயிரத்து 300 வரை உள்ளூர் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story