ஒட்டன்சத்திரம் பகுதியில் மக்காச்சோள அறுவடை பணி தீவிரம்


ஒட்டன்சத்திரம் பகுதியில் மக்காச்சோள அறுவடை பணி தீவிரம்
x

ஒட்டன்சத்திரம் பகுதியில் மக்காச்சோள அறுவடை பணி தீவிரம் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கொ.கீரனூர், கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, பொருளூர், வாகரை, கூத்தம்பூண்டி, அப்பியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் மக்காச்சோளத்தை பயிரிட்டிருந்தனர். தற்போது அவை வளர்ந்து, அறுவடைக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் மக்காச்சோள அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை, வெயிலில் உலர வைத்திருக்கும் காட்சியை ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

கடந்த 3 மாதத்துக்கு முன்பு, அந்த பகுதியில் மக்காச்சோள விளைச்சல் அதிகமாக இருந்தது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்தது. 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம், ரூ.1,950-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் விவசாயிகள் மக்காளச்சோளம் பயிரிடுவதை தவிர்த்து வேறு விவசாயத்துக்கு மாறி விட்டனர். இதனால் மக்காச்சோள சாகுபடி பரப்பு குறைந்து, உற்பத்தியும் குறைந்து விட்டது. இதன் எதிரொலியாக தற்போது மக்காச்சோளம் விலை உயர்ந்து விட்டது. தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,400-க்கு விற்பனை ஆகி வருகிறது. கால்நடை தீவனங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள், கிராமங்களுக்கு நேரடியாக வந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கின்றனர். மக்காச்சோள விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story