மக்காச்சோளம் சாகுபடி மும்முரம்


மக்காச்சோளம் சாகுபடி மும்முரம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மக்காச்சோளம் சாகுபடி மும்முரமாக நடக்கிறது.

அரியலூர்

மக்காச்சோள சாகுபடி

அரியலூர் மாவட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக உடையார்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பருத்தி, முந்திரி சாகுபடி செய்த விவசாயிகளும் தற்போது மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மக்காச்சோளம் சாகுபடி செய்தால் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக கூறப்படுகிறது. உடையார்பாளையம் பகுதியில் தற்போது மக்காச்சோளப்பயிர்கள் நன்கு வளர்ந்து, பூக்கள் பூத்துள்ளது. சில நாட்களில் கதிர்கள் வெளிப்படும் நிலையில் உள்ளது.

இரட்டிப்பு லாபம்

மக்காச்சோளக்கதிர்கள் வளர்ந்தபின்னர் விவசாயிகள் அவற்றை அறுவடை செய்து, சோளத்தை தனியாக பிரித்து சாலையோரங்களில் காயவைத்து, பின்னர் விற்பனை செய்வார்கள். வயல்வெளி பகுதிகளுக்கு வியாபாரிகள் வந்து எடைபோட்டு மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து கொண்டு செல்வார்கள். இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. மக்கச்சோளத்தை மாவாக்கி மாட்டுத்தீவனமாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மக்காச்சோளம் ஏக்கருக்கு 25 முதல் 35 மூட்டைகள் வரை விளைகிறது. மக்காச்சோளம் பயிரிட ஒரு ஏக்கருக்கு மொத்தம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவாகிறது. அதற்கேற்க லாபம் இரட்டிப்பாக கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக ஆர்வலம் காட்டுகின்றனர். மக்காச்சோளத்தை காயவைக்க இடம் இல்லாததால், சாலையோரத்தில் காய வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதை தவிர்க்க ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்காச்சோளத்தை காய வைக்க களம் அமைத்து தர வேண்டும், என்றனர்.


Next Story