வாளவாடி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்காச்சோளப்பயிர் வாடி வதங்குகிறது.


வாளவாடி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்காச்சோளப்பயிர் வாடி வதங்குகிறது.
x

வாளவாடி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்காச்சோளப்பயிர் வாடி வதங்குகிறது.

திருப்பூர்

தளி

வாளவாடி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்காச்சோளப்பயிர் வாடி வதங்குகிறது.

மக்காச்சோளம்

உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டுள்ளது. அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள், பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. அதை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.

அத்துடன் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வலையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையை ஆதாரமாகக் கொண்டு உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கிணர், குடிமங்கலம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்காச்சோளம் சாகுபடி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 -ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் காய்கறிகள், தானிய வகைகள் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து உள்ளனர். உடுமலை சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாதம் ஒரு முறை பி.ஏ.பி. தண்ணீர் வருவதாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்காச்சோள பயிர்கள் வாடி வதங்கி விட்டது. இதன் காரணமாக பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கிணற்று பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு பி.ஏ.பி. தண்ணீரே முழுக்க முழுக்க ஆதாரமாக உள்ளது. ஆனால் மாதத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் வருவதால் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வளர்ச்சி குன்றி விடுவதுடன் கதிர்கள் பிடித்து பால் ஏறும் தருணத்தில் வாடி வருகிறது.

எனவே பி.ஏ.பி. ஆயக்கட்டு பாசனத்தில் பல்வேறு காரணங்களுக்காக விற்பனை செய்யப்பட்ட நிலங்களை கணக்கீடு செய்து அவற்றை ஆயக்கட்டு பாசனத்தில் இருந்து நீக்க வேண்டும்.அத்துடன் மாதத்திற்கு 2 சுற்று தண்ணீர் விடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் பயிர்களின் வளர்ச்சியும் சீராக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story