மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

தேப்பெருமாநல்லூர் மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் மகா மாரியம்மன், சுந்தர காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் தீமிதி திருவிழா நடந்தது. நேற்று மதியம் மகா மாரியம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இரவு 7.30 மணிக்கு அம்மன் கோவிலுக்கு திரும்பியதும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் குழந்தைகளை சுமந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்து 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால் தேப்பெருமாநல்லூரில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடைப்பட்டது. நள்ளிரவு வரை பெண்கள் மகா மாரியம்மனுக்கு மாவிளக்கு போட்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவிடைமருதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் செய்திருந்தனர். தீமிதி விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு உதவி ஆணையர் உமாதேவி, தேப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவரும் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவருமான வக்கீல் எஸ். கே. குமரவேல், நாட்டான்மைகள் குழு, மற்றும் நாட்டான்மைகள், கிராமமக்கள் செய்து இருந்தனர்.


Next Story